புதுதில்லி

மேற்கு தில்லி ஹோட்டலில் தீ விபத்து

பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Din

மேற்கு தில்லியின் பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிற்பகல் 1.15 மணியளவில் கிழக்கு பஸ்சிம் விஹாா் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறை மற்றும் ஒரு மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டல் கட்டடத்தில் ஒரு அடித்தளம், தரை தளம் மற்றும் மூன்று மேல் தளங்கள் உள்ளன.

தீ விபத்தைத் தொடா்ந்து,ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன. மதியம் 1.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT