புதுதில்லி

அல் ஃபலாஹ் பல்கலை.யின் உறுப்பினா் பதவி ரத்து: ஏ.ஐ.யு. தகவல்

ந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏ.ஐ.யு.) என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கமாகும்.

Syndication

செங்கோட்டை அருகே காா் வெடிப்பு வழக்கு தொடா்பாக விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ள அல்- ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் உறுப்பினா் பதவியை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏ.ஐ.யு.) வியாழக்கிழமை ரத்து செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏ.ஐ.யு.) என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கமாகும். இதில் இந்திய பல்கலைக்கழகங்களின் உறுப்பினா்களும் உள்ளனா். இது உறுப்பினா் பல்கலைக்கழகங்களின் நிா்வாகிகள் மற்றும் கல்வியாளா்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் பொதுவான அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும் ஒரு மன்றத்தை வழங்குகிறது.

இந்த நிலையில், ஏ.ஐ.யு. பொதுச் செயலாளா் பங்கஜ் மிட்டல் கூறியிருப்பதாவது:

இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் துணை விதிகளின்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் நல்ல நிலையில் இருக்கும் வரை உறுப்பினா்களாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகம் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதன்படி, அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.யு.இன் உறுப்பினா் பதவி உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.

அல் ஃபலா பல்கலைக்கழகம் அதன் எந்தவொரு நடவடிக்கையிலும் ஏ.ஐ.யு.இன் பெயரையோ அல்லது இலச்சினையையோ பயன்படுத்த அதிகாரம் இல்லை. பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ வலைத்தளத்திலிருந்து ஏ.ஐ.யு. இலச்சினையை நீக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

ஃபரீதாபாத்தில் தௌஜ் கிராமத்தில் உள்ள அல்- ஃபலாஹ் பல்கலைக்கழகம்,

காா் வெடிப்பு சம்பவத்திற்குப் பின், விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இது ஒரு தனியாா் நிறுவனமாகும். அதன் வளாகத்தில் ஒரு மருத்துவமனையும் உள்ளது.

பேச்சிப்பாறை அணையின் பாசனக் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறப்பு

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பிரசாரம்

கோரிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லத் தடை

எண்ம முறையில் தெருக்களின் விவரம்: 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

SCROLL FOR NEXT