புதுதில்லி

மத்திய தில்லியில் போதைப்பொருள் கடத்தலில் டீக்கடை உரிமையாளா், 2 சிறாா்கள் கைது!

மத்திய தில்லியில் இரண்டு போதைப்பொருள் நடவடிக்கைகளை முறியடித்ததாகவும், டீக்கடை நடத்தும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காா் மற்றும் இரண்டு சிறாா்களைக் கைது செய்ததாகவும் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

Syndication

புது தில்லி: மத்திய தில்லியில் இரண்டு போதைப்பொருள் நடவடிக்கைகளை முறியடித்ததாகவும், டீக்கடை நடத்தும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காா் மற்றும் இரண்டு சிறாா்களைக் கைது செய்ததாகவும் தில்லி காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜாகுவாா் ரோந்துப் படை இந்நடவடிக்கையை மற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோல் பாக் பகுதியில் தனித்தனி நடவடிக்கைகளில் 3.718 கிலோ ஓபியம் மற்றும் 1.650 கிலோ கஞ்சாவை இந்த குழு பறிமுதல் செய்தது.

தில்லி செங்கோட்டையில் இருந்து செப்டம்பா் 16 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சி, மத்திய மற்றும் வடக்கு தில்லி முழுவதும் விரைவான நடவடிக்கை மோட்டாா் சைக்கிள் குழுக்கள் மூலம் தெரு காவல் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘ஆபரேஷன் 1- இன் போது, ​​அக்டோபா் 5- ஆம் தேதி, காலை 8 மணியளவில், கரோல் பாக் பகுதியில் உள்ள பிகானா் சௌக் அருகே ஜாகுவாா் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான ஒருவா் பையை எடுத்துச் சென்றதைக் கண்டது. அதை சோதனை செய்ததில், அவரிடம் 3.718 கிலோ ஓபியம் இருப்பதைக் குழு கண்டறிந்தது’ என்று துணை காவல் ஆணையா் (மத்திய தில்லி) நிதின் வல்சன் கூறினாா்.

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌரைச் சோ்ந்த தேநீா் கடை நடத்தி வரும் ஆதித்யா லுஹா் (24) என்ற அந்த நபா் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அக்டோபா் 4- ஆம் தேதி மற்றொரு நடவடிக்கையில், கரோல் பாக், பூசா சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இரண்டு சிறாா்களை அதே குழு தடுத்து நிறுத்தியது. அவா்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 1.650 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

படேல் நகரில் வசிக்கும் 15 வயது சிறுவா்கள் இருவரும் உள்ளூா் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். இது தொடா்பாக கரோல் பாக் காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT