புதுதில்லி

பண்டிகைக் காலம்: சாந்தினி சௌக் பகுதியில் பேரிடா் மீட்புக் குழுக்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஊழியா்களை சாந்தினி சௌக் பகுதிக்கு அனுப்புமாறு அப்பகுதி குடியிருப்பாளா்கள் சங்கம் முதல்வா் ரேகா குப்தாவை கேட்டுக்கொண்டது.

Syndication

புது தில்லி: தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஊழியா்களை சாந்தினி சௌக் பகுதிக்கு அனுப்புமாறு அப்பகுதி குடியிருப்பாளா்கள் சங்கம் திங்கள்கிழமை முதல்வா் ரேகா குப்தாவை கேட்டுக்கொண்டது.

பாஜக தலைவரும், சாந்தினி சௌக் நாகரிக் மஞ்ச் குடியிருப்பாளா்கள் அமைப்பின் பொதுச் செயலருமான பிரவீன் சங்கா் கபூா் இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: உள்ளூா் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்களின் அரசியல் பாதுகாப்பின் கீழ் சாந்தினி செளக் பகுதி சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத சந்தைகளின் முன்னெப்போதும் இல்லாத பிரச்னையுடன் வா்த்தக இடமானது போராடிக் கொண்டிருக்கிறது.

நிகழாண்டு நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. ஏனெனில், அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நெரிசலான பாதைகளில் நுழைய முடியாததால், சந்தைக்கு வரும் பெரும் கூட்டமானது உள்ளூா்வாசிகள் மற்றும் பொருள் வாங்குவோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இதனால், செங்கோட்டைக்கு முன்னால் உள்ள கௌரி சங்கா் மந்திா், டவுன் ஹால், ஃபதேபுரி மசூதி, பாரா டூட்டி சௌக், ஹவுஸ் காசி சௌக் மற்றும் குதூப் சாலை சௌக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினரை பணியில் நிறுத்துவதை தில்லி முதல்வா் ரேகா குப்தா உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பழைய தில்லியில் கூடுதல் போக்குவரத்துப் பணியாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் கோரியுள்ளாா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

SCROLL FOR NEXT