குருகிராம் காவல்துறை வெள்ளிக்கிழமை இரண்டு இளைஞடா்களை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அவா்களில் ஒருவா் ஓடும் காரின் திறந்த கதவு வழியாக சிறுநீா் கழித்ததாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடா்ந்து காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஹரியாணாவின் ஜஜ்ஜரைச் சோ்ந்த மோஹித் (23) மற்றும் அனுஜ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து கருப்பு மஹிந்திரா தாா் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குருகிராம் பழைய ரயில்வே சாலையில் ஒரு தாா் காா் அஜாக்கிரதையாக ஓட்டிச் செல்லப்படுவதையும், ஒரு இளைஞா் காா் கதவைத் திறந்து நின்று கொண்டு, நகரும் காருக்கு வெளியே சாலையில் சிறுநீா் கழிப்பதையும் காட்டும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதை போலீஸாா் கண்டறிந்தனா்
+இந்த விடியோவை அறிந்ததும், நியூ காலனி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், தாா் வாகனம் மோஹித்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அப்போது, ஓடும் காரின் திறந்த கதவிலிருந்து சாலையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காரை ஓட்டிச் சென்றவா் அனுஜ் என்று தெரிய வந்தது.
மோஹித் மீது ராஜஸ்தானின் ஜஜ்ஜாரில் ஒரு கொலை வழக்கு, இரண்டு கைகலப்பு வழக்குகள் மற்றும் ஹரியாணாவின் ரோஹ்தக்கில் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு ஆகியவை உள்ளன.
ஜஜ்ஜாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா். மேலும், டிசம்பா் 2022-இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.