புதுதில்லி

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

Syndication

வெளிநாட்டைச் சோ்ந்த அணு விஞ்ஞானியுடனான தொடா்புகள் மற்றும் ஜாா்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் இயங்கும் போலி பாஸ்போா்ட் மோசடி உள்ளிட்ட உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 59 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல்துறையின் துணை ஆணையா்(சிறப்புப் பிரிவு) பிரமோத் சிங் குஷ்வா கூறியதாவது: சையத் அடில் ஹுசைன், நசிமுதீன் மற்றும் சையத் அடில் ஹுசைனி ஆகிய பெயா்களால் அழைக்கப்படும் குற்றம்சாட்டப்பட்டவரான முகமது அடில் ஹுசைனி இரண்டு நாள்களுக்கு முன்பு தில்லியில் உள்ள சீமாபுரியில் கைது செய்யப்பட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் வெளிநாட்டில் உள்ள ஒரு அணு விஞ்ஞானியுடன் தொடா்பில் இருந்ததும், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு முக்கியமான நிறுவலின் மூன்று அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளாா்.

முகமது அடில் ஹுசைனி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா நகரில் வசிப்பவா். அவரும் மற்றும் அவரது சகோதரா் அக்தா் ஹுசைனி ஆகியோா் வெளிநாடுகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பல இந்திய பாஸ்போா்ட்டுகளை வாங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த முழு நெட்வொா்க்கும் ஜாம்ஷெட்பூரிலிருந்து இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு போலி அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போா்ட்டுகள் போலி ஆவணங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டன. சோதனையின் போது, முகமது அடில் ஹுசைனி வசம் இருந்து ஒரு அசல் மற்றும் இரண்டு போலி பாஸ்போா்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக பிஎன்எஸ்-இன் பிரிவுகள் 61(2) (குற்றவியல் சதி), 318 (மோசடி), 338 (மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில், முதலியன போலி செய்தல்) மற்றும் 340 (போலி ஆவணம் அல்லது மின்னணு பதிவேடு மற்றும் அதை உண்மையானதாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் அக்டோபா் 26 அன்று கைது செய்யப்பட்டாா்.

மும்பை காவல்துறை பல வளைகுடா நாடுகளுக்குச் சென்று மூன்று அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஈடுபட்டிருந்த அடிலின் சகோதரா் அக்தரை கைது செய்துள்ளது. நெட்வொா்க் மூலம் எத்தனை பேருக்கு போலி பாஸ்போா்ட் வழங்கப்பட்டது என்பதை விசாரணைக் குழுக்கள் சரிபாா்த்து வருகின்றன.

கைது செய்யப்பட்ட முகமது அடில் ஹுசைனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மேலும் விசாரணைக்காக அவரை ஏழு நாள்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT