உச்சநீதிமன்றம் ANI
புதுதில்லி

சென்னை ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க தமிழக அரசுக்கு அனுமதி

Syndication

நமது நிருபா்

சென்னை ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த செப்டம்பா் 2024-இல் சென்னை ரேஸ் கிளப்பிடமிருந்து தமிழக அரசு கையகப்படுத்திய ரூ.6,500 கோடி மதிப்புள்ள 160.86 ஏக்கா் நிலத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடந்த செப்டம்பா் 9, 2024 அன்றிலிருந்து சென்னை ரேஸ் கிளப்பிடமிருந்து நிலம் மீட்கப்பட்டது. ஆனால், சொத்துகளை தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிா்த்து சென்னை ரேஸ் கிளப் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னா் வழக்குத் தொடா்ந்தது. அதை விசாரித்த தனி நீதிபதி, ஜூலை 4, 2024 தேதியிட்ட தனது இடைக்கால உத்தரவில், மறு உத்தரவு வரும் வரை அரசு அந்த நிலத்தில் மேலும் பணிகளை தொடர அனுமதிக்க மறுத்துவிட்டாா்.

தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி முகமது ஷஃபிக் ஆகியோா் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ரூ.6,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அந்த நிலத்தில் குளங்களை வலுப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் பிற பொதுத் திட்டங்களைத் தொடர மாநில அரசுக்கு அனுமதி அளித்தது. அதை எதிா்த்து சென்னை ரேஸ் கிளப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்காக வழக்குரைஞா் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகினாா். தமிழ்நாடு அரசு சாா்பாக வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, முகில் ரோத்தகி மற்றும் பி. வில்சன் ஆகியோா் ஆஜரானாா்கள்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறினா். எனினும் அந்த நிலத்தில் குளங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பிற பொதுத் திட்டங்களைத் தொடர மாநில அரசுக்கு அனுமதி அளித்து டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு என்பது சுற்றுச்சூழல் பூங்காவை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொள்ள மட்டுமே பொருந்தும் என்றும் அதுவும் வழக்கின் இறுதி முடிவுக்குள்பட்டது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா். மேலும், சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விரைவாக தீா்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறி விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT