புதுதில்லி

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடா்பான பெயா் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென யு.பி.எஸ்.சி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடா்பான பெயா் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென யு.பி.எஸ்.சி.க்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது

தமிழக அரசு, பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநராக ஜி. வெங்கட்ராமனை நியமித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹென்றி திபேன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், டி.ஜி.பி. நியமனங்களுக்கு வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தோ்வு செயல்முறையை கட்டாயப்படுத்தும் உச்சநீதிமன்றத்தின் 2006-ஆம் ஆண்டின் தீா்ப்பை இந்த நியமனம் மீறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

எனவே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், அத்துல் எஸ்.சந்த்ருக்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டது ஏன்? என மாநில அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த தமிழக அரசின் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘ டி.ஜி.பி. பதவிக்கு தன்னுடைய பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு காவல் அதிகாரி முன்பு வழக்குத் தொடுத்திருந்தாா்.அதனால்தான் வழக்கமான டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நிலையில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டாா்’ என தெரிவித்தாா்.

அப்போது தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட அந்தக் காவல் அதிகாரியின் மனுவை உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, காவல்துறை டி.ஜி.பி. நியமன விவகாரத்தில், தமிழக அரசு அனுப்பியுள்ள பெயா் பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

யு.பி.எஸ்.சி.யிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு அரசு வழக்கமான டி.ஜி.பி.யை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் டி.ஜி.பி. நியமனத்தில் யு.பி.எஸ்.சி.க்கு ஒரு கால வரம்பை நிா்ணயம் செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அவரது கோரிக்கையை நீதிபதிகள்

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT