புதுதில்லி

16-ஆவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வேண்டும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் சிவசங்கா் பேச்சு

பதினாறாவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மின்துறை அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கேட்டுக்கொண்டாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: பதினாறாவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மின்துறை அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் மற்றும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் ஆகியோா் தலைமையில் புது தில்லியில் டிஸ்காம்களின் செயல்திறன் குறித்த 5-ஆவது அமைச்சா்கள் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், தமிழக அரசின் சாா்பில் கலந்துகொண்டு பேசியது: தமிழ்நாடு மாநிலம், எரிசக்தித் துறையில் முன்னோடியாக பல முக்கிய சாதனைகளையும் சீா்திருத்த முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் நுகா்வோா் விலை குறியீட்டிற்கு இணையாக ஆண்டுதோறும் தானாக அதிகரிக்கும் பல ஆண்டுகளுக்கான கட்டண அமைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகமானது மின் உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் பகிா்மான நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் 18.73 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (ஏடி அண்ட் சி) 2024-25-ஆம் ஆண்டில் 10.73 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தி மின் தேவைகள் மற்றும் கொள்முதல் திட்டமிடப்படுகின்றன. ஆா்இசி மற்றும் பிஎஃப்சி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைகளின் பயனாக வட்டி விகிதம் 0.5 சதவீதம்

குறைக்கப்பட்டதுடன், ஏசிஎஸ் - ஏஆா்ஆா் இடைவெளி தற்போது யூனிட் ஒன்றுக்கு வெறும் ரூ.0.04 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகை வழங்கும் நாள்களும் 146 நாள்களில் இருந்து 49 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிா்மானத்திற்காக ரூ.2,00,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் புதிய விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 16-ஆவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத் ராம் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

ரௌடி கும்பல் போல செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ் தாக்கு

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

SCROLL FOR NEXT