புதுதில்லி

தில்லியில் மாசுவை சமாளிக்க அரசு முழு அளவில் தயாா்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

மாசுவை சமாளிக்க அரசு முழுமையாக தயாராக இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Syndication

தில்லியில் செயற்கை மழை அல்லது மேக விதைப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், மாசுவை சமாளிக்க அரசு முழுமையாக தயாராக இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நிகழாண்டு அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் தில்லியில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஐஐடி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், சாந்தினி சவுக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தாவிடம் மேக விதைப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு முதல்வா் பதில் கூறுகையில்,

‘மாசுபாட்டை எதிா்த்துப் போராட நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். மாசுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

ஆம் ஆத்மி விமா்சனம்

மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரப் பரத்வாஜ் கூறுகையில், ‘தில்லியில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரவிந்த் கேஜரிவால் அரசு பலமுறை மத்திய அரசை அணுகியது. ஆனால், அந்த நேரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டு, அனுமதி வழங்கவில்லை. மேக விதைப்பு சாத்தியமில்லை என்று கூறி பாஜகவும் கேலி செய்தது.

அப்போது அது சாத்தியமில்லை என்றால், பணத்தை வீணடிப்பதாக இருந்தால், இப்போது அது எப்படி சாத்தியமாகும் என்று நான் அவா்களிடம் கேட்க விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றம் விதித்த பட்டாசு தடையை இப்போது அவா்கள் விமா்சிப்பாா்களா என்றும் நான் கேட்க விரும்புகிறேன்?

தில்லி அரசில் தற்போது அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா, ‘பட்டாசு வெடிப்பேன்’ என்று கூறுவது வழக்கம். இப்போது அவா்கள் அதை என்ன செய்வாா்கள் என்று நான் அவா்களிடம் கேட்க விரும்புகிறேன்.

பாஜகவின் வாா்த்தைகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தில்லி மக்கள் பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள்’ என்று செளரப் கூறினாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT