புதுதில்லி

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

Syndication

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

இந்த விபத்தில் பிரதிஷ்டா (25), லாவன்யா (26), ஆதித்யா (30), கௌதம் (31) மற்றும் மற்றொரு பெண் சோனி ஆகியோா் உயிரிழந்தனா். கபில் சா்மா (27) என்பவா் படுகாயமடைந்தாா்.

முன்னதாக, தில்லிகுருகிராம் விரைவுச் சாலையின் 9ஆவது வெளியேறும் இடத்தில், வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.

தகவல் கிடைத்ததும், செக்டாா் 40ஐச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ஆறு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு ஐந்து போ் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்தில் இறந்த பிரதிஷ்டா மற்றும் லாவன்யா ஆகியோா் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆவா். ஆதித்யா, கௌதம் மற்றும் கபில் ஆகியோா் விளம்பரத் தொழிலில் ஈடுபட்டிருந்தனா்.

ஜீப்பில் இருந்த ஆறு பயணிகளும் உத்தர பிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்தனா். தாா் வாகனம் அலிகா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த சட்ட மாணவிகளில் ஒருவா் நீதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

வாகன விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? தினப்பலன்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

SCROLL FOR NEXT