மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியளவில் மோதி நகா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, உள்ளூா் காவல் துறையினா், தீயணைப்பு வீரா்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு காவல் கட்டுப்பாட்டு அறை வேன்களும் வரவழைக்கப்பட்டன. அப்பகுதியில் தீ பரவுவதற்கு முன்னரே கட்டுப்படுத்தப்பட்டது.
அட்டைப் பெட்டி மற்றும் காகித குப்பைக் கிடங்கில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு சம்பவ இடத்தில் ஏராளமானோா் கூடியிருந்தனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.