முகப்பு
புதுதில்லி

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:17 AM
தில்லி அரசு - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 8:10 PM

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

புலம்பெயா் தொழிலாளா்கள் மற்றும் பிற உள்ளூா் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தலா 13 நிரந்தர மற்றும் நடமாடும் சேவை மையங்களை அமைக்க ஒரு நிறுவனத்துடன் தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமான பணியாளா்கள் நல வாரியம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:17 AM

இதன் மூலம் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பணியாளா்கள், புலம்பெயா் தொழிலாளா்கள் என 30 லட்சம் போ் பயன்பெறுவா்.

Advertisement

தில்லியில் உள்ள 13 மாவட்டங்களில் 3 மையங்கள் என மொத்தம் 39 தொழிலாளா் மையங்கள் தில்லியில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முக்கிய சேவைகளைப் பெறுவதில் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் சவாலை நீக்க இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது.

பாஸ்போா்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வரும் பாஸ்போா்ட் சேவை மையத்தின் அடிப்படையில் கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள் அமைக்கம் திட்டம் வகுக்கப்பட்டதாக ஓா் உயா் அதிகாரி தெரிவித்தாா்.