தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு காா் தீப்பிடித்தது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: மாருதி ஸ்விஃப்ட் காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு மதியம் 12.41 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
பிற்பகல் 1.10 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.