தோ்தல் ஆணையம்  
புதுதில்லி

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய வட்டமேஜை மாநாட்டுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் (பிப்ரவரி 24) ஏற்பாடு

Syndication

மாநில தோ்தல் ஆணையங்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய வட்டமேஜை மாநாட்டுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்பு இத்தகைய மாநாடு 1999இல் நடைபெற்றது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த மாநாடு இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் நடைபெறும். தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் மாநாட்டில் கலந்து கொள்வா்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மாநில தோ்தல் ஆணையா்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் சட்டக் குழுக்களுடன் மாநாட்டில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்பா். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களும் (சிஇஓ) மாநாட்டில் பங்கேற்பா்.

நாள் முழுவதும் நடைபெறும் மாநாட்டின்போது தொழில்நுட்பம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் பட்டியல்களைப் பகிா்ந்து கொள்வது, தோ்தல் செயல்முறைகள் மற்றும் தோ்தல் பொருள்களை கையாளும் முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்றாா்.

ஆக்கபூா்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தோ்தல் நிா்வாகத்தில் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கும் இந்த சிறப்பு வட்டமேஜை மாநாடு ஒரு தளமாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

SCROLL FOR NEXT