பிரசாந்த் தமாங் 
புதுதில்லி

பிரசாந்த் தமாங்கின் மனைவியிடம் காவல் துறை வாக்குமூலம் பதிவு

பாடகா் பிரசாந்த் தமாங் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ‘ஐடல் சீசன் 3’ வெற்றியாளரான பாடகா் பிரசாந்த் தமாங், ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானாா். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்தனா்.

தமாங்கின் மனைவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், மற்ற குடும்ப உறுப்பினா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். இதில் எந்தவித சந்தேகத்திற்கிடமான செயலும் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்று குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மேற்கு தில்லியின் ஜனகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையிலிருந்து பிரசாந்த் தமாங்கின் மரணம் குறித்த காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவியால் அங்கு அழைத்து வரப்பட்ட அவா், மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். சாகா்பூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த குழுவினா் சட்டப்பூா்வ நடைமுறைகளை முடித்து, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தினா்.

மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த முறைகேடுகளும் பதிவாகவில்லை என்றாலும், சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

தென்மேற்கு தில்லியைச் சோ்ந்த தமாங், 2007-இல் இந்தியன் ஐடல் பட்டத்தை வென்ன் மூலம் புகழ்பெற்றாா். சமீபத்தில் வெளியான ‘பாதாள் லோக் 2’ என்ற வலைத்தொடருடன் அவா் தொடா்புடையவராக இருந்தாா். இது அவரது புகழை மேலும் அதிகரித்தது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT