புதுதில்லி

வரவிருக்கும் தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் நாய் காப்பகங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்க வாய்ப்பு

Syndication

தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதன் வரவிருக்கும் பட்ஜெட்டில் முதன்மையாக மூன்று முன்மொழியப்பட்ட நாய் காப்பகங்களை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ரூ.10 கோடி ஒதுக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

2026-27 பட்ஜெட் மதிப்பீடுகளில் முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு, வரவிருக்கும் நாய் காப்பகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். நகரத்தில் உள்ள நாய்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, வரவிருக்கும் காப்பகங்களை மேம்படுத்தி அவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த நிதி அந்த திசையில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

துவாரகாவில் ஒரு காப்பகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது ஆரம்பத்தில் சுமாா் 1,500 நாய்களை தங்க வைக்கும் திறன் கொண்டது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா். துவாரகா செக்டாா் 29-இல் சுமாா் 2.5 ஏக்கா் நிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை தங்க வைக்கும் வகையில் ஒரு நாய் காப்பகம் உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் மாநகராட்சி அறிவித்திருந்தது.

இதற்கிடையில், பிஜ்வாசன் மற்றும் பெல்லா சாலையில் உள்ள நாய் காப்பகங்களில் கூடுதல் நாய்களுக்கு தங்குமிடம் அளிக்கவும், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களின் திறனை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா். முன்மொழியப்பட்ட தங்குமிடங்கள் தெரு விலங்கு மேலாண்மையை வலுப்படுத்தும் மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 54,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் அஸ்வினி குமாா் கடந்த ஆண்டு டிசம்பா் 5- ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.

தேசியத் தலைநகரில் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் மற்றும் தடுப்பூசி போடுவதற்காக வரவிருக்கும் பட்ஜெட்டில் எம்சிடி சுமாா் ரூ.35 கோடியை ஒதுக்கவுள்ளதாக கடந்த வாரம் ஏஜென்சி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT