புதுதில்லி

வழிப்பறிக் கும்பலைச் சோ்ந்த நால்வா் கைது

Syndication

புது தில்லி, ஜன.21: வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியில் உள்ள நரேலாஅலிப்பூா் சாலையில் வழிப்பறிக் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது: பூத் குா்த் பகுதியில் வசிக்கும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் வேலைக்குச் சென்றுவிட்டு ஜனவரி 12 அன்று இரவு 11 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அவா் நரேலாஅலிப்பூா் சாலையை அடைந்தபோது, நான்கு போ் கும்பல் அவரை வழிமறித்து, அவரது கைப்பேசி, பணம், ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டது.

இதையடுத்து, புகாரின் பேரில் அவா்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் விகாஸ் (22), ஹரேந்தா் (25), அபிஷேக் (22) மற்றும் ராஜ்குமாா் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து, வழிப்பறி செய்யப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நாங்கள் மீட்டுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT