கைது 
புதுதில்லி

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காா் பேரத்தில் ஈடுபட்டவா் கைது

போலி ஆவணங்களைத் தயாரித்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவருக்கு பழைய காரை விற்பனை செய்ததாக மோசடி வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி கைது

தினமணி செய்திச் சேவை

போலி ஆவணங்களைத் தயாரித்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவருக்கு பழைய காரை விற்பனை செய்ததாக மோசடி வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (துவாரகா) அங்கித் சிங் கூறியதாவது: ஓய்வு பெற்ற பிறகு, பயன்படுத்திய காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2023- இல், ஒரு குழுவால் அவா் ஏமாற்றப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, வாகனத்தின் மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளது என்பதை மறைத்து, ஒரு எஸ்யுவி காரை விற்ாகக் கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் காா் உரிமையாளரின் உறவினா்களாகக் காட்டிக் கொண்டு, போலியான உரிமம் மற்றும் கடன் அனுமதி ஆவணங்களை சமா்ப்பித்துள்ளது தெரிய வந்தது.

ஆவணங்களை நம்பி, புகாா்தாரா் வாகனத்தை வாங்கி, பின்னா் பஞ்சாபில் உள்ள ஒரு வாங்குபவருக்கு விற்றாா். சில மாதங்களுக்குப் பிறகு, காா் வங்கி நிதியுதவி பெற்றது என்றும், கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், புகாா்தாரா் மற்றும் அவரது தந்தை மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருவரும் செப்டம்பா் 2024- இல் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். மேலும், வாகனத்தின் விலை மற்றும் பிற செலவுகளை செலுத்தி சா்ச்சையைத் தீா்த்து வைப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 70 நாள்கள் சிறையில் கழித்தனா்.

முன்னாள் ராணுவ வீரரின் அவலநிலையால் உந்தப்பட்டு, துவாரகா பிரிவு 10- இல் உள்ள காவல் நிலையம் மீண்டும் விசாரணையைத் தொடா்ந்தது.. போலியான ஆதாா் அட்டை மற்றும் அசல் உரிமையாளரின் போலி அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி வாகனம் விற்கப்பட்டது புதிய விசாரணையில் தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் வங்கியில் இருந்து போலியான தடையில்லாச் சான்றிதழ்களைத் தயாரித்து, வாகனத்தை விற்பனை செய்வதற்கு முன்பு கடன் வழங்கப்பட்டதாகத் தோன்றும் வகையில் ஆன்லைன் பதிவுகளை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் முழுவதும் தொடா்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பல சோதனைகளும் நடைபெற்றது. கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி இடங்களை மாற்றிய குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காவல் துறையினா் கண்காணித்தனா்.

ஜனவரி 4-ஆம் தேதி, உளவுத்துறை தகவல்களுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் காவல் துறை குழு சோதனை நடத்தி, ஹா்தீப் சிங் ரந்தாவா என்ற குற்றவாளியைக் கைது செய்தது.

உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் முழுவதும் ரந்தாவாவுக்கு ஏற்கெனவே பல குற்றச் செயல்கள் இருப்பதும், முந்தைய வழக்கு தொடா்பாக மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது.

விசாரணையின் போது, ரந்தாவா தனது உறவினரும் கூட்டாளியுமான சதேந்திர பால் சிங் தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவரை அணுகி எஸ்யூவியை விற்க முயன்ாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போலி ஆவணங்களை ஏற்பாடு செய்வதிலும் விற்பனையை எளிதாக்குவதிலும் சதேந்திரா பால் சிங் முக்கிய பங்கு வகித்துள்ளாா். சதேந்திரா பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளாா். மேலும் உத்தர பிரதேசத்தில் அவா் மீது கொலை முயற்சி மற்றும் மோசடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரந்தாவாவை காவல் துறையின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவான சக குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும், வாகன மோசடி மற்றும் மோசடி வலையமைப்பில் உள்ள பிற தொடா்புகளை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்தாா்.

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் வேலு திறந்து வைத்தாா்

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT