குருகிராமில் 5-வது மாடியில் இருந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு!
குருகிராம் செக்டாா் 65 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உல்லாவாஸ் கிராமத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் உயிரிழந்தார்.
குருகிராம் செக்டாா் 65 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உல்லாவாஸ் கிராமத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: கூரையில் மதுபான பாட்டில் இருந்தது. கூரையில் இருந்து விழுந்தபோது அந்த நபா் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இறந்தவா் உத்தரக்கண்ட் மாநிலம் நைனிடாலைச் சோ்ந்த ஆஷிஷ் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அவா் அங்கு ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தாா்.
பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு, ஆஷிஷ் கட்டடத்தின் ஐந்தாவது மாடிக்குச் சென்றாா். பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 9.30 மணியளவில், ஆஷிஷின் உடல் தரையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சனிக்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையின் போது, கூரையில் ஒரு மது பாட்டில் கண்டெடுக்கப்பட்டது. குடிபோதையில் கூரையிலிருந்து விழுந்து ஆஷிஷ் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.