முகப்பு
புதுதில்லி

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி ஆக பதிவு

Updated On : 18 மே 2026, 2:22 am IST
- PTI
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகி இருந்தது.

இது பருவகால சராசரியை விட 1.5 புள்ளிகள் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவகால சராசரியை விட 0.6 புள்ளிகள் குறைவாகும்.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 28 சதவீதமாக பதிவாகி இருந்தது. மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 174 என்ற அளவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவித்தன.

திங்கள்கிழமை காலை வேளையில் பலத்த தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 44 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.