ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்
ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்- செவல்குளம் ஆச்சா; பக்.202; ரூ.90; சுரா பதிப்பகம், சென்னை-40; )044- 2616 2173.
ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்- செவல்குளம் ஆச்சா; பக்.202; ரூ.90; சுரா பதிப்பகம், சென்னை-40; )044- 2616 2173.
சோசலிச சமுதாய மேதைகள் என்ற வரிசையில் சீனாவின் ஸன் யாட் ùஸன், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரையும் வைத்து, அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைச் சுவையாக விளக்கும் நூல். சீனாவில் மஞ்சு வம்சத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஸன் யாட் சென் அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவ்வழியில் சீனாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அல்ல. எனினும் சோசலிசக் கருத்துகளில் ஈடுபாடுடையவர். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் இந்நூலில் மிக விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றன. ஸன் யாட் ùஸன்னின் வாழ்க்கையை மட்டுமல்ல; சீனாவின் அன்றைய வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கம்யூனிசத் தத்துவத்தின் மூல கர்த்தாக்களான காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களையும், கருத்துகளையும் மிகச் சுருக்கமாக நூலாசிரியர் விவரித்துள்ளார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்திய உலகச் சூழ்நிலை, அவர்கள் எழுதிய புத்தகங்கள், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அற்புதமான நட்பு என இந்நூல் மேலும் விரிந்து செல்கிறது.