நூல் அரங்கம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம் - டி.ஞானையா; பக்.232; ரூ.175; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.

சோம வள்ளியப்பன்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம் - டி.ஞானையா; பக்.232; ரூ.175; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.

தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக் கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் நூல்களில் இருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

"இந்தியா என்பது ஒரு தேசமல்ல, கற்பிதம் செய்யப்பட்டது', "பிரிந்து செல்லும் உரிமை அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்திருக்காது' என்பன போன்ற பல கருத்துகளை பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அரசியல் நிகழ்வுகளுடன் ஜின்னாவின் சோகமயமான தனிப்பட்ட வாழ்க்கையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

சில கருத்துகளை மீண்டும் மீண்டும் கூறுவதையும், எழுத்துப் பிழைகளையும் தவிர்த்திருக்கலாம். வரலாற்றுச் சம்பவங்கள் கோர்வையாகவும், எழுத்து நடை எளிமையாகவும் இருந்திருந்தால் படிப்பதற்குச் சுவையாக அமைந்திருக்கக் கூடும். கடந்த கால வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் படிப்பதற்கு ஏற்ற நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT