நூல் அரங்கம்

இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு- முஹம்மது மர்மடியூக் பிஃக்தால்: தமிழில் ஆர்.பி.எம்.கனி: பக்.208; ரூ.100; யுனிவர்சல் பப்ளிஷர், சென்னை 17; - 044- 2834 3385.

முனைவர் கோ. விசயராகவன்

இஸ்லாமியக் கலைப்பண்பு- முஹம்மது மர்மடியூக் பிஃக்தால்: தமிழில் ஆர்.பி.எம்.கனி: பக்.208; ரூ.100; யுனிவர்சல் பப்ளிஷர், சென்னை 17; )044- 2834 3385.

இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக் கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது.

பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவராகப் பிறந்த நூலாசிரியர், பல இஸ்லாமிய நூல்களைப் படித்து ஆய்வு மேற்கொண்டும், பல இஸ்லாமியர்களுடன் பழகி அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளால் கவரப்பட்டும் இஸ்லாத்தை தழுவினார். 1927-ஆம் ஆண்டு அவர் ஆங்கிலத்தில் இஸ்லாமிய கலைப்பண்பு, வெற்றி தோல்வியின் காரணங்கள், சகோதரத்துவம், விஞ்ஞானமும் கலையும், சகிப்புத் தன்மை, விதிவச நம்பிக்கைக் குற்றச்சாட்டு, ஆண் - பெண் உறவு நிலை, இஸ்லாத்தின் நகரம் ஆகிய தலைப்புகளில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புதான் இந்நூல். மொழிபெயர்ப்பு எளிமையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT