முகப்பு
நூல் அரங்கம்

இந்தியாவில் கடல் கோட்டைகள்

நூல் அரங்கம்

இந்தியாவில் கடல் கோட்டைகள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

இந்தியாவில் கடல் கோட்டைகள் - சி.எஸ்.முருகேசன்; பக்.272; ரூ.275; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044- 2650 2086.

பாதுகாப்பற்ற கடல்களுக்கு நடுவே பாதுகாப்பான கோட்டைகளை அமைப்பது என்பது சாதாரண விஷயமா? ஆனால், அப்படிப்பட்ட கோட்டைகளையும் அமைத்துள்ளனர் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. உலகில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் தமது நாட்டைப் பாதுகாக்க இந்த வகை கடல் கோட்டைகள் அமைக்கப்படுகின்றன. இவை ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய கடல் கோட்டைகள், கடல் நடுவில் துறைமுக வசதி கொண்ட மணல் தீவுகள் அல்லது பெரிய பாறைத் திட்டுகள் மீது மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய  முடிகிறது. 

கடல் கோள்களின் முன்னோடி, இந்தியாவில் கடல் கோட்டைகள் தோன்றியதன் பின்னணி,  முதல் கடல் கோட்டை, அபிசீனியர் வெற்றிக் கோட்டை ஆகியவை பற்றி தனித்தனியாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.  

அடுத்து, போர்த்துகீசியர் மலபார் கடல் கோட்டைகள், சத்ரபதி சிவாஜி அமைத்த கடல் கோட்டைகள், கனோஜி ஆங்க்ரேவின் கடல் கோட்டைகள், ஆங்கிலேயரின் கடல் கோட்டைகள் என மொத்தம் 40 கடல் கோட்டைகள் பற்றிய அரிய தகவல்களும், புகைப்படங்களும் இந்நூலில் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →