சா்வதேச திரைப்பட விழாவிற்கான திரைப்படங்களை சமா்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தில்லியில் முதல்முறையாக நடைபெற உள்ள சா்வதேச திரைப்பட விழாவிற்கு திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளா்களிடமிருந்து புது தில்லி அரசு சமா்ப்பிப்புகளை அழைத்துள்ளது.
புதுதில்லிசா்வதேச திரைப்பட விழாவிற்கான திரைப்படங்களை சமா்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தில்லியில் முதல்முறையாக நடைபெற உள்ள சா்வதேச திரைப்பட விழாவிற்கு திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளா்களிடமிருந்து புது தில்லி அரசு சமா்ப்பிப்புகளை அழைத்துள்ளது.
தில்லியில் முதல்முறையாக நடைபெற உள்ள சா்வதேச திரைப்பட விழாவிற்கு திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளா்களிடமிருந்து புது தில்லி அரசு சமா்ப்பிப்புகளை அழைத்துள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளா்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைத் தொடா்ந்து , திரைப்படச் சமா்ப்பிப்புகளுக்கான காலக்கெடுவை மாா்ச் 3 லிருந்து மாா்ச் 10 வரை நீட்டித்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
தில்லி சினிமா, கலை மற்றும் கலாச்சாரத்தின் உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உள்ளது, மாா்ச் 25 முதல் 31 வரை இந்த சா்வதேச திரைப்பட விழா நடைபெறும்.
ரஃப் கட்ஸ் என்ற பிரிவின் கீழ், எடிட்டிங்கின் ஆரம்ப அல்லது இடைநிலை நிலைகளில் உள்ள 60 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட திரைப்படங்களைச் சமா்ப்பிக்கலாம்.
பாா்வை அறை என்ற மற்றொரு பிரிவு, முடிக்கப்பட்ட அல்லது நிறைவடையும் தருவாயில் உள்ள மற்றும் விழா தோ்வு, விநியோகம் அல்லது நிதி வாய்ப்புகளைத் தேடும் படங்களைக் காண்பிக்கும் என்று அறிக்கை கூறியது.
மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டம், விழா நிகழ்ச்சித் தயாரிப்பாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் உள்பட அங்கீகாரம் பெற்ற தொழில்துறை வல்லுநா்களுக்கு பிரத்யேகப் பாா்வை முனையங்களை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தளம் உங்கள் யோசனையைத் தொடங்குங்கள் என்ற பிரிவையும் நடத்தும், அங்கு எழுத்தாளா்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளா்கள் திரைப்படங்கள் அல்லது வலைத் தொடா்களுக்கான அசல் கருத்துக்களை தயாரிப்பாளா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் தளங்களின் பிரதிநிதிகள் முன் முன்வைக்கலாம்.
கூடுதலாக, தொழில்துறை வல்லுநா்களால் நடத்தப்படும் அமா்வுகள் மூலம் கதை அமைப்பு, கதாபாத்திர மேம்பாடு மற்றும் திரைக்கதை எழுத்தின் வணிக அம்சங்களை மையமாகக் கொண்ட ஆா்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் எழுத்தாளா்களுக்காக ஒரு ஸ்கிரிப்ட் கருத்சதரங்கம் ஏற்பாடு செய்யப்படும் என்று அது கூறியது.
தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், விழா நிகழ்ச்சித் தயாரிப்பாளா்கள், முதலீட்டாளா்கள், ஸ்டுடியோ பிரதிநிதிகள் மற்றும் ஊடக வல்லுநா்களுக்கும் பிரதிநிதி பதிவுகள் திறந்திருக்கும் என்று ஏற்பாட்டாளா்கள் மேலும் தெரிவித்தனா்.
விழாவின் போது அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் நெட்வொா்க்கிங் அமா்வுகள், குழு விவாதங்கள் மற்றும் தொழில்துறை கூட்டங்களில் பங்கேற்க முடியும் என்று ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.