முகப்பு
நூல் அரங்கம்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

நூல் அரங்கம்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை-மருதன்- பக். 440; ரூ.475, கிழக்கு பதிப்பகம், சென்னை-600014, 044-42009603.

சிந்து சமவெளி நாகரிகம் முதல் தற்போது வரை இந்தியாவின் வரலாற்றைப் பலர் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் புத்தகம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வையில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. 

கிரேக்கரான ஹொரோடோட்டஸில் தொடங்கி,  தீஷியஸ்,  நியார்கஸ்,  மெகஸ்தனிஸ்,  பாஹியான்,  யுவான் சுவாங்,  அல்பெரூனி,  மார்க்கோபோலோ,  இபின் பதூதா,  நிக்கோலா காண்டி,  வாஸ்கோடா காமா,  சீகன் பால்கு எனப் பல வெளிநாட்டவர்களின் குறிப்புகள் இதில் விரிவாக உள்ளன.

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள், அவர்கள் யாரைச் சந்தித்தார்கள், எந்த வழியில் பயணம்,  அவர்கள் காலத்திய இந்தியாவின் நிலை,  ஆட்சி செய்தவர்கள், மக்களின் நிலை, கல்வி, சமூகம் உள்ளிட்டவற்றின் நிலை எனப் பல்வேறு தளங்களுக்கும் புத்தகம் பயணிக்கிறது.

மாவீரன் அலெக்சாண்டரின் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.  வர்த்தகம், பெளத்த மதத்தின் வளர்ச்சி, இந்தியாவின் ஆட்சி, தென்னிந்தியப் பகுதிகளின் சிறப்புகள், சந்திரகுப்தர், அசோகர், ஹர்ஷர், அரேபிய அரசர்கள், கஜினி முகமது,  அக்பர் உள்ளிட்ட முகலாய அரசர்கள், விஜயநகர மன்னர்கள் என அள்ள அள்ளக் குறையாத வரலாற்றுத் தகவல்களைப் புத்தகம் வழங்குகிறது.    

ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பு, கிறிஸ்தவப் பாதிரியார்களின் பணிகள் எனப் பல்வேறு விவகாரங்களை விறுவிறுப்புடன் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் படங்கள், அரசர்களின் ஓவியங்கள், சிலைகளின் படங்கள், தொல்பொருள் சின்னங்களின் படங்கள் ஆகியவையும் புத்தகத்தை சுவாரசியம் கொண்டதாக்குகின்றன.   

முழு கட்டுரையைப் படிக்க →