நூல் அரங்கம்

பெருந்தமிழர் பக்தவத்சலம்

தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் ஒப்புதலோடு, 1964-ஆம் ஆண்டில் முதல் பதிப்பை நூலாசிரியர் வெளியிட்டார்.

DIN

பெருந்தமிழர் பக்தவத்சலம் - கவிரத்ன காஞ்சி அமிழ்தன்;  பக். 204;  ரூ.140; அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சென்னை-32; 98410 64941.

தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் ஒப்புதலோடு, 1964-ஆம் ஆண்டில் முதல் பதிப்பை நூலாசிரியர் வெளியிட்டார். நூலாசிரியர் 1981}இல் இயற்கை எய்திய நிலையில், 48 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.  

பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் கல்வியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அளப்பரியது. நீர்மேலாண்மை, மின்சாரத் திட்டங்கள், விவசாயத்தில் மறுமலர்ச்சி, தொழில் துறையில் மேற்கொண்ட புரட்சி, கோயில்களில் மேற்கொண்ட திருப்பணிகள், திரைத்துறைக்கான திட்டங்கள் என்று நூற்றுக்கணக்கான சாதனைகளைப் படிக்கும்போது,  சரித்திரம் படைக்கும் சாதனைகளாக இருக்கின்றனவே என்று வியக்க வைக்கிறது.

அவரது பிறப்பு முதல் குழந்தைப் பருவம், கல்வி,  அரசியல், காங்கிரஸிலும், ஆட்சியிலும் மேற்கொண்ட சாதனைகள் என்று நூல் அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.

தீவிர ஆன்மிகப் பற்றாளரான பக்தவத்சலம் "ஸ்ரீராமஜெயம்' என்று எழுதியே பணியைத் தொடங்குதல், காரில் செல்லும்போது மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டால் நின்று குறைகேட்பது, மக்கள் பணியில் அலட்சியம் காட்டினால் கோபப்படுதல், காரில் செல்லும்போது ஓட்டு நருக்குக் கூறும் அறிவுரை... என்பது போன்ற ருசிகர தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதுபோல, இவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கருணை உள்ளம் கொண்டதைக் காண முடிகிறது. பக்தவத்சலம் தமிழகத்துக்கு ஆற்றிய பணிகளைத் தெரிந்துகொள்ள இந்த நூலை வாசிப்பது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தலைமை காவலரை தாக்கியவா் கைது

SCROLL FOR NEXT