முகப்பு
நூல் அரங்கம்

யோகா எனும் அற்புத சக்தி

நூல் அரங்கம்

யோகா எனும் அற்புத சக்தி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

யோகா எனும் அற்புத சக்தி - சி.முத்துசாமி; பக்.192; ரூ.300; கவி ஓவியா பதிப்பகம்,  சென்னை-600011.  9840912010.
இயந்திரத்தனமாக மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில், யோகாசனங்கள் மூலமாக ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் மனிதனின் உடலில் எந்த வகையில் சம்பந்தப்பட்டுள்ளன என்பதை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது, அவைகளை அனுசரித்து நமது வாழ்க்கைச் சூழலை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் அளப்பரிய நன்மைகளையும் இந்த நூல் எடுத்தியம்புகிறது. இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களை கடைப்பிடித்தால், இன்று பெரும்பாலான மக்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை, இரத்த அழுத்தம், கண் பார்வை குறைவு, உடல் பருமன், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் முழுமையாக குணமடையும் என்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வயிற்றில் புண் இருப்பவர்கள் பிஸ்கட் சாப்பிடக் கூடாது; ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே டீ சாப்பிட வேண்டும் உள்ளிட்ட ஏராளமான உடல்நலக் குறிப்புகளை இந்நூல் பரிந்துரைக்கிறது.

மனித உடல் அமைப்பையும் முக்கிய மண்டலங்களின் உறுப்புகளையும் அவை செயல்படும் விதத்தையும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யோகாவின் ஒவ்வொரு ஆசனத்துக்கான படமும் அதை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதும் விளக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான யோகாசனங்கள், பிராணாயாமம், பிராணாயாமத்தின் வகைகள், முத்திரைகள், குழந்தையின்மை, கருவியல், இடுப்பு வலிக்கு யோகப் பயிற்சி ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. யோகாசனத்தால் பயனடைந்தோரின் குறிப்புகளைப் பதிவு செய்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →