முகப்பு
நூல் அரங்கம்

தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும் - முனைவர் சு.நரேந்திரன்; பக்.  304; ரூ.340; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; 044- 26251968.

தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வி ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே மலர்ந்தது என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார்.  தமிழ் வழிக்கல்வியின் வளர்ச்சி,  இங்கிலாந்தில் இருந்து மெக்காலே வருகைக்குப் பின்னர்  கல்வியில் ஏற்பட்ட புரட்சியை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

மெக்காலேவின் வருகைக்குப் பின்னர் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது நூல்.

கல்வியில் கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட முன்னேற்றம், காங்கிரஸ் அரசின் கல்விக் கொள்கைகள், ஹிந்தி திணிப்பை எதிர்த்து திமுகவின் போராட்டம் போன்றவை சுருக்கமாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறப்பட்டுள்ளது.

இரு நூற்றாண்டுகளில் தமிழ் வழிக் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களும், மறுமலர்ச்சிகளும்  24 கட்டுரைகளில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு. தமிழில் தொழில் கல்வியின் அவசியம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ள நூலாசிரியர், இதை அரசு கொண்டுவருவதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.

உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளதும் பாராட்டத்தக்கது. நீட் தேர்வுக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதை விவரித்துள்ள நூலாசிரியர், எளிதில் தேர்ச்சி பெற வழிகாட்டுதலையும் அளித்துள்ளார். 

நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழை கொண்டுவருவதன் முயற்சியையும் எடுத்துரைத்துள்ளார்.

தமிழர்கள், மாணவர்கள் அவசியம் படித்து அறிய வேண்டிய தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →