முகப்பு
நூல் அரங்கம்

இந்திய சூஃபிகள் வரிசை  யாஸீன் மௌலானா நாயகம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

இந்திய சூஃபிகள் வரிசை  யாஸீன் மௌலானா நாயகம்- நாகூர் ரூமி; பக். 103; ரூ. 140; கிழக்கு பதிப்பகம், 3 பி தரைதளம், சௌத் உஸ்மான் சாலை, சென்னை-17.

 இந்திய சூஃபிகளான நிஜாமுத்தீன் அவ்லியா, குணங்குடி மஸ்தான் சாஹிப், தாஜுத்தீன் பாபா ஆகியோரின் வரிசையில் யாஸீன் மௌலானா நாயகத்தையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. நபிகள் நாயகத்தின் 33-ஆவது தலைமுறையில் யாஸீன் மௌலான நாயகம் வருவதாகவும் இந்நூல் தெரிவிக்கிறது.

இலங்கை, திக்குவலையில் 1899-இல் பிறந்து இந்தியாவுக்கு தந்தையுடன் வந்து தமிழகத்தில் மார்க்க கல்வி பயின்று, தென்னிந்தியாவிலேயே சிறந்த அரபி புலமைப் பெற்றவராகவும் யாஸீன் மௌலானா நாயகம் திகழ்ந்தார். 18 வயதில் உ.பி. தேவ்பந்த் பல்கலைக்கழகத்தில் படித்து மார்க்க அறிஞர் பட்டம் பெற்றார். 1946-இல் அரபிச் சொற்களுக்கான தமிழ் அகராதியை தயாரித்தார். 1959-இல் மெக்காவுக்கு சென்றபோது சஹீஹ் புகாரி நபிமொழித் தொகுப்புக்கு அரபியில் விளக்க உரையும் எழுதியுள்ளார். 

பின்னர் 1966-இல் சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள திருமுல்லைவாசலுக்கு வந்து தன்னுடைய இறுதி நாள் நேரத்தை குறிப்பிட்டு மறைந்தார். அங்குதான் யாஸீன் மௌலானா நாயகத்தின் தர்கா கட்டப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையின் அரிய தகவல்களும், அறிவாலும், அற்புதத்தாலும் அவர் செய்த பல்வேறு சேவைகளையும், சாதனைகளையும் இந்த நூல் விளக்குகிறது. படித்தறிய வேண்டிய தகவல்கள் உள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →