முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

2026 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் நிறுவனம் ஒப்பந்தம் குறித்து...

Updated On : 7 மார்ச், 2026 at 10:44 AM
அசோக் லேலண்ட் ரசிகர்களுக்காக சிறப்பு சிஎஸ்கே ரசிகர் பேருந்தை அறிமுகப்பட்டுத்தியுள்ளது. - Ashok Leyland signs deal
பகிர்:

2026 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி. சிஎஸ்கே அணியின் மஞ்தள் ஜெர்சியின் வலது மார்புப் பகுதியில் அசோக் லேலண்ட் லோகோ மற்றும் ரசிகர்களுக்காக சிறப்பு சிஎஸ்கே ரசிகர் பேருந்தை அறிமுகப்பட்டுத்தியுள்ளது.

சென்னை கிண்டி அசோக் லேலண்ட் தலைமை அலுவலகத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம், 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரப்பூர்வ ‘பிரின்சிபல் ஸ்பான்சராக’இணையும் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், சிஎஸ்கே அணியின் "முதன்மை ஸ்பான்சராக" இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

இந்தக் கூட்டாண்மைபில் , ‘விசில் போடு’என்ற வசனத்தோடு ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘சிஎஸ்கே ரசிகர் பேருந்து’(CSK Fan Bus) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு செல்லும் எனக் கூறப்படுகிறது.

அற்புதமான சீசன்

இது குறித்து இந்துஜா குழுமத்தின் தீரஜ் இந்துஜா கூறியிருப்பதாவது:

வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்கான முதன்மை ஸ்பான்சராக அசோக் லேலண்ட் சென்னை சூப்பர் கிங்ஸுடன் கூட்டு சேருவதில் மகிழ்ச்சி. சிஎஸ்கே மற்றும் அசோக் லேலேண்ட் இரண்டும் மீள்தன்மை, நிலைத்தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதாக தீரஜ் இந்துஜா கூறியுள்ளார்.

மேலும், எங்களுடன் இணைந்து ரசிகர் பேருந்தை அறிமுகப்படுத்தியதற்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மகாத்ரே ஆகியோருக்கு சிறப்பு நன்றி.

நாடு முழுவதும் பயணங்களை வலுப்படுத்துவதிலிருந்து களத்தில் சாம்பியன்களை ஆதரிப்பது வரை, இந்த கூட்டாண்மை சென்னையின் பெருமையையும் ஆர்வத்தையும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இதோ ஒரு அற்புதமான சீசன் வரப்போகிறது என கூறியுள்ளார்.

summary

Ashok Leyland signs deal as official sponsor of Chennai Super Kings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.