முகப்பு
நூல் அரங்கம்

துப்பட்டா போடுங்க தோழி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

துப்பட்டா போடுங்க தோழி - கீதா இளங்கோவன்;  பக்.128;  ரூ.160; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆ 75500 98666.

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற  நூலாசிரியர்,  இணையதளத்தில் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஒவ்வொரு கட்டுரையும் காத்திரமான படைப்பு. சமூகச் செயல்பாட்டாளரான நூலாசிரியர் கற்பு, காதல், தாய்மை, உடல்சார் கற்பிதம், குடும்பம், சுயபரிவு, உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், வாகனம் பழகுதல், ஆடை சுதந்திரம் என பெண்களின் இன்றைய வாழ்வியல் முறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, செறிவார்ந்த சிந்தனைகளுடன் விவாதிக்கிறார்.

ஆண், பெண் இருபாலரும் அவசியம் வாசித்தொழுக வேண்டிய கருத்துகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. 'பேராற்றல்மிக்க ஆளுமையை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல்; அந்த உடல் குறித்து எந்தக் குற்றவுணர்வும் வேண்டாம்; பெருமிதம் கொள்' என்று வளரிளம் பெண் குழந்தைகளை உற்சாகத்துடன் தட்டிக் கொடுத்து படைப்புகள் வாயிலாக உடன் பயணிக்கிறார் நூலாசிரியர்.

அன்றாட வாழ்வியலின் ஊடாக விழிப்புணர்வு கருத்துகளை இலகுவான நடையில் சொல்வதால், அவை சிந்தையில் எளிதாகப் பதிகின்றன.

பெண்ணுக்கான உரிமைகளை ஆண்களுக்கும் துல்லியமாக புரிய வைக்கும் தனது இலக்கில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். கல்வி நிலையங்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வீடுகளிலும் அவசியம் இடம் பெற வேண்டிய அற்புதமான நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →