முகப்பு
நூல் அரங்கம்

இயக்குநர் மணிவண்ணனும் நானும்

Updated On : 6 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

இயக்குநர் மணிவண்ணனும் நானும் - கே. ஜீவபாரதி; பக். 268; ரூ.399; நம் பதிப்பகம், சாலிகிராமம், சென்னை-600 093; ✆95661 10745.

கவிஞர், பொதுவுடைமைச் சிந்தனையாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்ட நூலாசிரியர், திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை கட்டுரைகளாக்கி, அமரர் மணிவண்ணனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு, பயணங்களின்போது அவர் பரிமாறிக்கொண்ட கருத்துகள், திரையுலக சம்பவங்கள், சவால்கள் இந்த நூலில்  காட்சிகளாக விரிகின்றன. 

உதவி இயக்குநராக மணிவண்ணனிடம் சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் பயணித்தது குறித்த அனுபவங்களை 19 அத்தியாயங்களில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். ஆரம்பம் முதல் மணிவண்ணனுடன் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது. 

Advertisement

மணிவண்ணனின் வசனங்களை தனது வசன உச்சரிப்பாலும், உடல்மொழியாலும் மெருகேற்றியவர் நடிகர் சத்யராஜ். மணிவண்ணன் இயக்கி, சத்யராஜ் நடித்த 'பாலைவன ரோஜாக்கள்', 'விடிஞ்சா கல்யாணம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1986-இல் ஒரே நாளில் திரைக்கு வந்து, இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தது திரையுலக சாதனையாகும். 

இந்த இரண்டு படத்திலுமே ஜீவபாரதி உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்நூலில், திரையுலகத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.