நூல் அரங்கம்

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

DIN

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்- கிரிஜா ராகவன்; பக்.240; ரூ.200; காயத்ரி பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-83; ✆ 044- 2489 8162.

ஹிந்து மதத்துடன் இரண்டறக் கலந்த ஒன்று குரு பக்தி.  தீபாவளித் திருநாளில் குருவை வணங்கி ஞானத்தைப் பெற வேண்டும் என்பது முன்னோர்கள் காட்டிய வாழ்க்கை நெறி. அதனை உணர்த்தும் வகையிலான பல்வேறு கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது இந்த மலர். மகா பெரியவரின் அருளுரையில் தொடங்கி சுவாமி விமூர்த்தானந்தரின் நற்சிந்தனை, சித்தர்களின்  வரலாறு, புண்ணியத் தலங்கள் என ஒரு பக்கம் தெய்விகக் கட்டுரைகள் வசீகரிக்கின்றன.

மற்றொரு புறம் சுப்ர பாலன், மாலன், ம.நித்யானந்தம், அழகியசிங்கர், பா.ராகவன், ரேவதி பாலு என பல ஆளுமைகளின் இலக்கியப் பதிவுகள் வியாபித்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் மேன்மையை மட்டும் எடுத்துரைக்காமல் ஜென் வாழ்வியல் முறைகள் குறித்த கட்டுரையும் சிறப்புடன் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

குருவைப் போற்றுவதன் அவசியத்தையும், அதனை உணர்த்தும் சம்பவங்களையும் தொகுத்து பல்வேறு  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமகாலத் தலைமுறைக்கு கட்டாயம் கடத்த வேண்டிய கருத்துகளாக அவை உள்ளன.

ஏர்வாடி ராதாகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஜெ.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரின் எழுத்துகள் மீள்வாசிப்புக்கு தகுதியானவை. மாங்காடு காமாட்சி, பழனி பாலதண்டாயுதபாணி, வடுவூர் கோதண்டராமர் உள்ளிட்ட கடவுள்கள் மற்றும் மகா பெரியவர், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரர், சிவன் சார் ஆகிய அவதார புருஷர்களின் வண்ணப் படங்களும் நிறைந்துள்ளன.

ஆன்மிகம், இலக்கியம், சிறுகதை, கவிதை, வாழ்க்கை, சித்த புருஷர்கள் சரிதை, புராணம், நகைச்சுவை என பல்சுவை களஞ்சியமாக வெளியாகியுள்ளது நிகழாண்டு மலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT