முகப்பு
நூல் அரங்கம்

மீண்டும் மீண்டும் வசந்தம்

நாவல் பிரியர்களுக்கு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

மீண்டும் மீண்டும் வசந்தம் - சிவப்ரியா; பக்.158; ரூ.150; கலைஞன் பதிப்பகம், சென்னை-17; ✆044- 2834 0488.

மலேசியாவில் இருந்து வெளிவரும் 'தமிழ் மலர்' தினசரியில் ஞாயிறுதோறும் 42 வாரங்கள் வெளிவந்த தொடர் நாவல் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட மல்லிபட்டியைச் சேர்ந்த சக்தி என்ற இளைஞர் மலேசியா நாட்டு வேலைக்காகப் பணம் கட்டி வந்து வேலையில் சேருகிறார். தனது அத்தை மகள் கோகிலாவை திருமணம் செய்துகொள்ள, பணம் சேர்க்க அவர் இங்கு வருகிறார். உணவு விடுதியில் பணிபுரியும் அவருக்கு மலேசிய நாட்டில் காணப்படும் வானுயர்ந்த கட்டடங்கள், அதிசயங்களைக் கண்டு வியந்து போவதை, படிக்கும்போதே நாமும் வியக்கும் அளவுக்கு சுவைபட எழுதியுள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் அரசியல், மலேசியத் தமிழர்களின் வாழ்வியல், வேலைக்குச் சென்ற இந்தியத் தமிழர்கள் - மலேசியத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுமுறை, ஜோதிட நம்பிக்கைகள், முருகன் வழிபாடு, மலாய்க்காரர்கள்- தமிழர்கள் இயைந்த வாழ்க்கை போன்றவை குறித்து கதையின் வழியே நாம் அறியும் தகவல்கள் ஏராளம். பல தலைமுறைகளுக்கு முன்னால் அங்கு சென்ற தமிழர்களின் இன்றைய நிலையையும் அறிய முடிகிறது.

இரு நாடுகளின் வழியில் செல்லும் நாவல், இரு நாட்டு வாழ்வியல் முறைகளையும் எடுத்துரைக்கிறது. இறுதியில், சக்தி தனது அத்தை மகளை மணந்தாரா என்பதன் முடிவை வித்தியாசமான கோணத்தில் நகர்த்துகிறார் நூலாசிரியர்.

முழு கட்டுரையைப் படிக்க →