முகப்பு
நூல் அரங்கம்

ஆக்காட்டி

விவசாயிகளின் உயிரே அவர்களுடைய நிலம்தான் என்பதன் உயிரோட்டமான பதிவு இந்த நாவல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ஆக்காட்டி - இரா.பாரதிநாதன்; பக்.280; ரூ.360; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை-600 055; ✆ 044-2638 5272.

தஞ்சை காவிரிப் படுகையில் ஆழ்துளை கிணறுகள் மூலம் மீத்தேன் எரிவாயுவை எடுத்தது, அதன் பின் ஹைட்ரோ கார்பன் எடுத்தது போன்ற நிகழ்வுகளின்போது விவசாயிகளின் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. அதை விவசாயிகள் எதிர்த்தனர். அந்த நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நாவல்.

தனது மகன் நகரத்தில் வசித்தாலும் சொந்த கிராமத்தை, சொந்த நிலத்தை விட்டு நகரத்துக்குச் செல்ல மனமில்லாமல் மாங்குடி கிராமத்திலேயே வாழும் கலியன், எரிவாயு எடுப்பதற்காக தன்னுடைய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்பதால் வேதனைப்படுகிறார். அவரைப் பார்க்க நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்த அவருடைய பேரன் கார்த்திகேயன், கிராமத்து மக்கள் தங்களுடைய மண்ணின்மீது எந்த அளவுக்கு உயிரையே வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். எரிவாயுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வருகிறவர்களை எதிர்க்கும் அந்த கிராமத்து மக்களுடன் சேர்ந்து அவர்களுக்குத் துணை நிற்கிறான்.

விவசாயிகளும் அவர்களுடைய நிலமும் பிரிக்க முடியாமல் இரண்டறக் கலந்தவை என்பதையும், அது அவர்களின் கையைவிட்டுப் போகும் நிலை வரும்போது அவர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு, கொந்தளித்துப் போவார்கள் என்பதையும் மிக இயல்பாகச் சித்திரிக்கும் நாவல்.

கலியன் இறப்பதற்கு முன்பு அவருடைய வயலில் உள்ள மண்ணை எடுத்து வரச் சொல்கிறார். அதைப் பாலில் கலக்கி அவருக்கு கொடுக்கிறார்கள். அதன் பிறகே அவர் உயிர் பிரிகிறது. விவசாயிகளின் உயிரே அவர்களுடைய நிலம்தான் என்பதன் உயிரோட்டமான பதிவு இந்த நாவல்.

முழு கட்டுரையைப் படிக்க →