தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்- மறை.தி.தாயுமானவன்; பக்.416; ரூ.500; மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62; ✆ 9840988361.
நூலாசிரியரின் தந்தை மறை.திருநாவுக்கரசு எழுதிய மறைமலையடிகள் வரலாறு என்னும் 900 பக்கங்கள் கொண்ட நூல் 1959- இல் வெளிவந்தது. மாநில அரசின் பரிசையும் பெற்றது. அந்த நூல் 2013-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் மறுபதிப்புக் கண்டது. அந்நூலினை ஆதாரமாகக் கொண்டும், பிற தரவுகளையும் சேர்த்தும் இந்நூலை எழுதி நூலாசிரியர் பதிப்பித்துள்ளார்.
மறைமலையடிகள் பிறந்து வளர்ந்த நாகப்பட்டினத்தில் தொடங்கி, பல்லாவரத்தில் அந்திம கால வாழ்க்கையுடன் நூல் முடிகிறது. இடைப்பட்ட காலங்களில் அடிகளாரின் ஆகப் பெரும் தமிழறிஞர்களுடனான வாழ்க்கை, ஆராய்ச்சி, 60 நூல்களைப் பதிப்பித்தது என படிக்கப் படிக்கச் சுவையான சம்பவங்கள் இந்நூலில் உள்ளன.
'சாகுந்தலம்' நாடகத்தை தமிழில் கொண்டு வந்தது. அதற்கு சம்ஸ்கிருத மொழி புரியாமையால், சம்ஸ்கிருதம் பயின்றது சுவையாகக் கூறப்பட்டுள்ளது.
அடிகளார் என்றாலே தனித்தமிழ் இயக்கம்தான். பரிமாற் கலைஞர் வித்திட்டிருந்தபோதிலும் மறைமலை அடிகளும், அவருடைய மகள் நீலாம்பிகையும் தீவிரம் காட்டிதனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார்கள். நல்ல தமிழில் எழுதுவது குறித்து நூல்களும் எழுதினார்கள். இவற்றை இந்நூலில் விரிவாக நூலாசிரியர் கூறியுள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார், வ.உ.சி., திரு.வி.க, அண்ணல் தங்கோ, பெரியார், மன்னர் சேதுபதி, பாரதி தாசன், தேவநேயப் பாவாணர் போன்ற சமகாலத்தவருடன் மறைமலை அடிகள் நட்புடன் இருந்திருக்கிறார். தமிழர்க்கென தனி ஆண்டை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 500 அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் ஆண்டை நிறுவியிருக்கிறார்கள். இதற்கான சான்றாக 1935- இல் எடுக்கப்பட்ட குழுப்படத்தை நூலாசிரியர் இந்நூலில் இணைத்திருக்கிறார். மறைமலை அடிகளின் வாழ்க்கையை அறிய உதவும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.