போர்கள் ஓய்வதில்லை
இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
போர்கள் ஓய்வதில்லை - ச.இராமதாசு; பக்.202; ரூ.250; புதிய அரசியல் பதிப்பகம், சென்னை-34; ✆ 90031 18333.
"புரட்சி என்பது பழுத்த பிறகு மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல... நீ தான் அதை விழ வைக்க வேண்டும்'' என்னும் சே குவேராவின் புரட்சி வாசகத்துடன் நூலின் என்னுரையில் எழுதியிருக்கும் நூலாசிரியர் மருத்துவர் ச.இராமதாசு தனது போராட்ட அனுபவங்களை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாழ்வில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வோர் அரசியல் தலைவரும் ஓய்வாக அமர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கும்போது, கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதைப் போல நூலாசிரியரும் பயணம் மேற்கொண்டு 'போர்கள் ஓய்வதில்லை' என்ற நூலை எழுதியுள்ளார்.
சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்களைக் கைதூக்கிவிடுவதுதான் சமூக நீதி. ஆனால், அந்த நிலையில் வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்ட நூலாசிரியர், இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் அவரால் தொடங்கப்பட்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
குறிப்பாக குடிதாங்கியில் பட்டியலினத்தவரின் உடலை எதிர்ப்புகளையும் மீறி தாங்கிச் சென்று அடக்கம் செய்த சமூகநீதிப் புரட்சி, ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்த சமூகநீதி மாரத்தான், 1994-இல் கோவை உக்கடம் கோட்டைமேடு சோதனைச்சாவடியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், கச்சத்தீவை மீட்க கடலில் இறங்கிப் போராடிய நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் குறித்த தகவல்களும், அதனால் அவர் எதிர்கொண்ட சாவால்களும் வாசிப்பவர்களுக்குப் பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது.
'மரம் நடும் அறமே... மாபெரும் அறம்' என்ற இயக்கத்தைத் 2021-இல் தொடங்கி, தமிழகம் முழுவதும் சுமார் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்குக் காரணமாக இருந்திருப்பதிலிருந்து இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.