கம்யூனிசம் ஜென் நெருப்பு ஜென் காற்று
கம்யூனிசம் ஜென் நெருப்பு ஜென் காற்று- ஓஷோ (தமிழில் ஜராதுஸ்ட்ரா); பக்.432; ரூ.540, அறம் பதிப்பகம், திருவண்ணாமலை- 632 316; 91507 24997.
கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மக்களை ஆன்மிகத்திலிருந்து அரசியல், சமூகச் சித்தாந்தங்களை நோக்கி திருப்பியது கம்யூனிசம்.
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கம்யூனிஸ பேரியக்கம் வெகு வேகமாகச் சிதறுகிறது. இதற்கான பதில் கூறும் வகையில் ஓஷோவின் கம்யூனிசம் ஜென் நெருப்பு ஜென் காற்று நூல் அமைந்துள்ளது. ஓஷோவின் வழக்கமான சொற்பொழிவு போன்று கேள்வி பதில் வடிவில் உள்ள இந்நூல் கம்யூனிஸத்துக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு, அரசில் மதசார்பின்மையின் அவசியம் என பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கிறது. ஜென் தத்துவம் ஒரு மனிதனின் உள்மனதை ஆராய்வதற்கான அறிவியல் முறையை கற்பிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கைகளான அரசு, முதலாளித்துவம் போன்றவைகளுக்கு எதிராக ஓஷோவும் வலியுறுத்துகிறார்.
நாம் நமக்கான வாழ்வை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும், ஜென் நிலைப்பாட்டையும் இந்நூலில் விவரித்துள்ளார். அதிலும் குறிப்பாக கம்யூனிஸம் எனும் வேரில் தியானம் எனும் தண்டுகள் இருக்கும் போதுதான் மலர்கள் எனும் உலகம் அமையும். இந்த மூன்று படிக்கட்டுகள் மூலம் நாடுகள், இனங்கள் இல்லாத தனி மனிதர்களைக் கொண்ட உலகமாக இருக்கும் என ஓஷோ பதிவிட்டுள்ளார். இந்நூல் ஒருவரை உண்மையான 'ஆன்மிக கம்யூனிஸத்துக்கு அழைத்துச் செல்லும்.