நூல் அரங்கம்

தமிழ் இலக்கிய வரலாறு

DIN

தமிழ் இலக்கிய வரலாறு - ஹரி. விஜய லட்சுமி; பக்.454; ரூ. 320; செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001; ✆9486009826.

தொன்மைப் புகழ் வாய்ந்த தமிழ் மொழி இலக்கிய, இலக்கண வளமும் சிறப்பும் உடையது. அது, பனையோலைக் காலம் தொடங்கி அச்சுக் காலம் வழியாக அழகாக நடைபோட்டு இணையதள காலத்தோடு இணைந்து பயணிக்கிறது. அவ்வாறு எந்தக் காலத்துக்குமான தமிழில் இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சியையும், பல்வேறு காலகட்டங்களில் தமிழ் இலக்கியப் போக்குகளில் உருவான புதிய மாற்றங்களையும், அப்போதைய - சமகால இலக்கிய நடப்புகளையும், சிறப்பியல்புகளையும் 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மு.வரதராசனார், சி. பாலசுப்பிரமணியன், ரா. சீனிவாசன், ச. விமலானந்தம் என தமிழறிஞர்கள் பலரும் ஏற்கெனவே நூல்களாகப் படைத்துள்ளனர். அவ்வரிசையில் புதிய நோக்கிலும், மற்றுமொரு கோணத்திலும் ஆசிரியர் இந்த நூலை படைத்துள்ளார்.

'நாடும் மொழியும்', சங்க காலம், களப்பிரர் - பல்லவர் - சோழர் - நாயக்கர் - ஐரோப்பியர் காலங்கள், 'சமயங்கள் வளர்த்த தமிழ்', 'துறைதோறும் தமிழ்' உள்ளிட்ட பத்து தலைப்புகளிலான பகுதிகள் இதில் உள்ளன. 'இருபதாம் நூற்றாண்டிலிருந்து' என்ற பகுதியில் பெண்ணிய, தலித்திய இலக்கியங்கள் குறித்தும் பேசுவது சிறப்பு.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல்கள், இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ஆகிய பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளது பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்கள், தேர்வர்கள், தமிழ் ஆர்வலர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT