முகப்பு
நூல் அரங்கம்

சத்ரபதி சிவாஜி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சத்ரபதி சிவாஜி - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக்.160; ரூ.190; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; -✆ 81480 66645.

இந்திய தேசத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்த நேரத்தில், ஹிந்து தர்மத்தில் எழுந்த சவாலை முறியடிக்கும் விதமாக 1620-களின் பின்பகுதியில் தோன்றிய சத்ரபதி சிவாஜியின் வரலாற்றையும், அவரை பின்னால் இருந்து இயக்கிய ஜீஜாபாயையும் புதிய பார்வையில் அலசுகிறது இந்த நூல். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒளரங்கசீப்பை எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர் சிவாஜி.

சிவாஜியைப் பற்றிய புகழுரைகளைத் தவிர்த்து, உரிய தரவுகள், புகைப்படங்களுடன் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளதே இதன் சிறப்பு.

ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் அஸ்திவாரம், சிவாஜியும் கோட்டைகளும், ஷாஜஹானும் ஒளரங்கசீப்பும், சிவாஜியின் படையெடுப்பு, சிவாஜி தப்பித்தார், தாயின் ஆசீர்வாதமும் பயணமும், சிவாஜி சந்நியாசியானார், சிவாஜியின் கோபம், பதுங்கிப் பாய்தல், பட்டாபிஷேகம் உள்பட 29 தலைப்புகளில் சிவாஜியைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த நூல் அலசுகிறது. சிவாஜி குறித்தும் அவருடைய குடும்பத்தினர், ஆன்மிகப் பற்று, கடைசி நாள்கள் குறித்தும் அறியும்போது வியக்கவைக்கிறது.

மராத்தியர்களின் தமிழக வருகையும், அவர்கள் ஆக்கிரமித்த கோட்டைகள், பகுதிகள், தமிழகத்தை ஆண்ட மராத்திய மன்னர்கள் பட்டியலையும் பார்க்கும்போது, மராத்தியர்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது.

இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளை அன்றே தீர்மானித்தவர் சிவாஜி என்பது நூலைப் படித்து முடிக்கும்போது தெளிவாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →