இராஜ ராஜ சோழன் - ஜெகாதா; பக்.584; ரூ.600; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆94440 13999.
அனைத்துத் துறைகளிலும் எழுதி முத்திரை பதித்துள்ள நூலாசிரியர், நானூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய சிறப்புமிகு நூல்களில் ஒன்றுதான் இந்த நூல்.
இந்திய கலாசாரத்தை, வரலாற்றை, மானுடவியலை இவரது எழுத்து கையாள்வது சிறப்புடையது. அதிலும், மாறுபட்ட கோணத்தில், இராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை இதுவரை எவரும் அறியாத புத்தம்புது தகவல்களை அளித்துள்ளார் நூலாசிரியர்.
இலங்கையைக் கைப்பற்றியவர், தென் கிழக்கு ஆசியாவில் புலிக்கொடியை பறக்க விட்டவர் என்ற பெருமைகளை உடைய இராஜ ராஜ சோழன் கி.பி. 1014-இல் மரணித்ததில் எழும் சர்ச்சை, உடையாளூரில் சமாதி போன்றவை குறித்து மாறுபட்ட தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.
இராஜ ராஜ சோழனின் மூதாதையர், அவருடைய படையெடுப்புகள், சோழ சாம்ராஜ்ஜியம், கூட்டாட்சி, சூழ்ச்சிப் பின்னணி, உள்ளாட்சி நிர்வாகங்கள், ஆன்மிகப் பணிகள், சேதுபதி
களின் ஆட்சிக்குறிப்புகள், அயல்நாட்டு உறவுகள், மொழி, கல்வி வளர்ச்சி, கடற்படை, நாணயங்கள், நீர்வளம், நில உரிமை படைத்தவர்கள், வாரிசுரிமைக்கு எதிரான போராட்டம் என்று 50 கட்டுரைகளில் சோழப் பேரரசைப் பற்றி முழுமையாக அறியக் கூடிய நூல் இது.
ஆதித்ய கரிகாலன் கொலை, உத்தம சோழன், வந்தியத் தேவன் குறித்து எழுதாமல் விட்டிருந்தால், சோழர் வரலாறு முற்றுப் பெறாதே? இவர்களைப் பற்றிய குறிப்புகளோடு, கல்கியின் புதின கதாபாத்திரக் கட்டமைப்பு, பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள், திரைக்கலையில் பொன்னியின் செல்வன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. தமிழ் கலாசாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்த நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.