சிதிலங்களின் தேசம்
பாலஸ்தீன அரசியல் வரலாறு - சிதிலங்களின் தேசம்- நன்மாறன் திருநாவுக்கரசு; பக்.462; ரூ.520; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; 044-42009603.
பாலஸ்தீனத்தை மையப்படுத்தி ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போர் மனித குல வரலாற்றில் மறக்க இயலாத பேரழிவாகக் கருதப்படுகிறது.
பண்டைய பாலஸ்தீன வரலாற்றின் முதன்மைச் சான்றாக பைபிள் சுட்டிக் காட்டப்படுகிறது. பெரும்பாலான பாலஸ்தீன வரலாற்று நூல்கள் யூதர்களால் எழுதப்பட்டவை. மதச்சார்புடைய பைபிளையும், யூத வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளையும் களைந்துவிட்டு அம்மண்ணின் வரலாறை அறிய முற்படுவதே சரியானதாக இருக்கும் என்ற இந்நூலாசிரியரின் கருத்து முற்றிலும் சரியான கோணமாகும்.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பாலஸ்தீனத்தின் வரலாறு நீண்ட, நெடிய நிகழ்வுகளை உள்ளடக்கியது. எனினும் நவீன பாலஸ்தீன வரலாறை அறிவதற்கு ஒட்டோமன் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து தொடங்கினால் போதும் என்று இந்நூல் வரையறுக்கிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அண்மையில் தொடுத்த பயங்கரவாத தாக்குதலை விவரித்துவிட்டு, அதன் பின்னணியாக 43 அத்தியாயங்களில் பாலஸ்தீன வரலாறை பல்வேறு ஆதாரம், தரவுகளுடன் இந்நூல் விவரிக்கிறது.
பொதுயுக காலம் தொடங்கியதிலிருந்து ஒட்டோமன் பேரரசு, எகிப்து, பிரிட்டன், யூதர்கள், அமெரிக்கா, உலகப்போர்கள், ஹிட்லர் உள்பட எண்ணற்ற காரணிகள் பாலஸ்தீன மண்ணின் அரசியல் வரலாற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை இந்நூல் மூலம் அறியலாம். ஏமாற்றமும், நம்பிக்கையும், ரத்தமும் கண்ணீரும் கலந்திருக்கும் பாலஸ்தீனத்தின் வலி மிகுந்த வரலாறை பதிவு செய்திருக்கும் நூலாசிரியரின் உழைப்பு மெச்சத் தகுந்தது.