முகப்பு
நூல் அரங்கம்

நுழைவாயில்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

நுழைவாயில் - சோலை தமிழினியன்; பக்.176; ரூ.200; சோலைப் பதிப்பகம், சென்னை-11; ✆98405 27782.

'இலக்கியச் சோலை' எனும் இதழை பல ஆண்டுகளாக இடைவிடாது நடத்திவரும் நூலாசிரியர் எழுதிய 80 தலையங்கங்களின் தொகுப்பே இந்த நூல். செப். 2006 முதல் ஏப். 2023-ஆம் ஆண்டு வரையில், அந்தந்த மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி அவர் எழுதிய தலையங்கங்கள் கருத்தாழம் மிக்கதாகவே அமைந்துள்ளன. 'இதழ்களில் வெளியாகும் தலையங்கங்கள் அவற்றின் இதய ஓட்டம் எனலாம். தலையங்கங்களைக் கொண்டே அவ்விதழ்களின் தன்மையை அறியலாம்' என்பதற்கேற்ப, இந்தத் தலையங்கங்கள் மிகவும் சிறப்புமிக்கவை.

பதினேழு ஆண்டுகளில் உள்ளூர் முதல் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகவே இந்த நூலைக் கருதலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு, இடைத்தேர்தல்களை அலசும் 'எடைத்தேர்தல்', ரஷிய- உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி, கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் 'வாக்குறுதி', நெகிழி, நீட் தேர்வு மரணங்கள், கஜா புயல் தாக்குதல், நீர் மேலாண்மை, குரங்கணி தீவிபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் தீக்கிரை, ஜல்லிக்கட்டு போராட்டம், பணமதிப்பிழப்பு, கரோனா தொற்று, விக்ராந்த் போர்க்கப்பல், முப்படைத் தளபதியின் மரணம்... என சிறப்புமிக்கத் தலையங்கங்கள் சிந்திக்க வைக்கின்றன.

நெகிழிகளால் ஏற்படும் துயரத்தை தலையங்கமாக எழுதிய நூலாசிரியர், தனது இதழ்களை அன்று முதல் காகித உறையில் அனுப்பியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், சமூக அக்கறை கொண்ட தலையங்கங்களின் தொகுப்பு. படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒன்று.

முழு கட்டுரையைப் படிக்க →