சிங்கப் பாதை
சிங்கப் பாதை - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதமேந்திப் போராடியவர்களின் வீர வரலாறு - பி.கே. ராமச்சந்திரன்; பக். 256; ரூ. 290; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆8148066645.
நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் அழுத்தமான, ஆக்ரோஷமான இன்னொரு பக்கத்தைப் பேசுகிறது இந்த நூல். 1857 முதல் சுதந்திரப் போரில் தொடங்கி, 1947-இல், நாட்டின் விடுதலை வரையிலான காலகட்டத்தின் வரலாற்றுடன் இணைந்து போராளிகளின் வரலாற்றையும் தருகிறார் ஆசிரியர்.
எது நம் வரலாறு? இயலில் இரண்டாம் புலிகேசியையும் முகமது பின் காசிமையும் அறிமுகப்படுத்தி, கொலம்பஸின் குறிப்புடன், நம் வரலாறு குறுக்கப்பட்ட விதம் பற்றித் தெரிவிக்கிறார் ஆசிரியர். ராஜா ராவ் துலாராமிலிருந்து "ஆனந்த மடம்' நாவலின் அடித்தளமான சந்நியாசிக் கலகம் பற்றியும், தொடர்ந்து சுவாமி விவேகானந்தரில் தொடங்கி ஆயுதப் போராட்டக்காரர்கள் பலரும் அறிமுகமாகின்றனர்.
சாவர்க்கர் பற்றிய இயலில் அவருடைய படிப்புக்கு திலகர் உதவித் தொகை பெற்றுத் தந்தது பற்றியும் போராட்டம், சிறை வாழ்க்கை பற்றியும் விவரிக்கப்படுகிறது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகத் தன் வாழ்வில் பாதியை உலக நாடுகளில் அலைந்து கழித்தவரான சென்னையில் பிறந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலை ஆச்சாரியார் என்ற எம்.பி.பி.டி. ஆச்சாரியா மிகச் சிறப்பாக அறிமுகம் செய்யப்படுகிறார்.
சுப்பிரமணிய சிவா, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வே.சு. ஐயர், செண்பகராமன் போன்ற தமிழர்களுடன் நேதாஜி, பகத்சிங், அரவிந்தர் என எண்ணற்ற வீரர்களின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் லோன் என்ற ஆங்கிலேயர் கொல்லப்பட்டது தொடர்பான குரும்பூர் சதி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மீண்ட ராஜகோபால், காசிராஜன் ஆகியோரும் நூலில் நினைவுகூரப்படுகின்றனர்.
கத்தியின்றி ரத்தமின்றி நடந்த போராட்டத்தின் தலைவர்கள் பற்றிப் பலரும் அறிந்திருக்க, ஆயுதமேந்திப் போராடியவர்களை அறிந்து கொள்வதற்கான நல்ல தொகுப்பு.