முகப்பு
நூல் அரங்கம்

மேடை வசப்படும்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

மேடை வசப்படும் (பேச்சுக் கலை) - க.சிவகுருநாதன்; பக்.144; ரூ.150; வாலி பதிப்பகம், சென்னை-89; ✆ 99405 08595.

திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளரான நூலாசிரியர் தனது மேடை அனுபவம், தலைவர்களின் பேச்சுகளை அறிந்து எழுதியுள்ள நூல் இது. 'வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வாயிலிலிருந்து வெளிவந்த சொல்' கடந்து போன நாள் ஆகிய மூன்றும் திரும்பப் பெற முடியாதவை என்ற வரிசையில், மேடைப் பேச்சு மிக முக்கியமானது என்கிறார் அணிந்துரை எழுதியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.

இணைய உலகில் பேச்சாளர்களின் தடுமாறிய பேச்சுகள் பல ஆண்டுகளுக்கும் வைரலாக வெளிவரும் நிலையில், மேடைப் பேச்சு தற்போது அனைவராலும் கூர்ந்துகவனிக்கப்பட வேண்டியதாகிறது. வாங்க பேசலாம், மேடைப் பேச்சின் இலக்கணம், குறிப்புகளைத் தயாரித்தல், மிகச் சிறந்த சொற்பொழிவாளராவது எப்படி, சொற்பொழிவின் முக்கியத்துவம், குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மாற்றம், சொற்பொழிவாளர்களின் சமூகத் தாக்கம், மேடைப் புரட்சி செய்த வெளிநாட்டு வித்தகர்கள், சவாலை சமாளிப்பது எப்படி, நகைச்சுவை கலந்த சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சு, மகளிரின் பங்கு, பேச வேண்டியவைகளும் பேசக் கூடாதவைகளும், கூகுள் விவரங்களை உறுதி செய்வது, கவிதைகளைக் கையாள்வது, விழாக்கள் வெற்றி பெற துல்லியமாகத் திட்டமிடல் உள்ளிட்ட 17 தலைப்புகளைப் பார்த்தாலே, பேச்சில் அச்சுப் பிசகாமல் ஜொலிப்பதற்கான விவரங்கள் அள்ளித் தரப்பட்டுள்ளன. பேச்சால் வளர்ந்தோரும் பட்டியலிடப்பட்டுள்ளது சிறப்பு. பேச்சாளர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →