தமிழ்நாடு மக்களின் மரபும் பண்பாடும்
தமிழ்நாடு மக்களின் மரபும் பண்பாடும் - சோமலெ; பக்.304; ரூ. 300; முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு, இயற்கை வளங்கள், மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாடு உள்ளிட்டவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் நூலாசிரியர். மானுடவியல், பண்பாட்டியல் ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய அரிய பணியை, தனது பயண அனுபவம் வாயிலாக அவர் நிறைவேற்றி இருக்கிறார்.
மக்களையும், அவர்களின் வாழ்க்கை நிலைகளையும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே மரபான வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னதாக, நிலப்பரப்பின் வரலாறு, மொழிவளம், எழுதப்பட்ட இலக்கியம், வாய்மொழி இலக்கியம், சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்திருப்பதும் அவசியம். அந்த வகையில் இந்நூல், மானுடவியலாளர்களுக்கு வழிகாட்டும் குறிப்புதவி நூலாக விளங்குகிறது.
இடமும் மக்களும், கற்பனைப் பாத்திரங்களும் இதிகாச மாந்தர்களும், மதமும் மந்திரமும், வழக்கங்களும் மரபுகளும், தேரும் திருவிழாவும், வாய்மொழி இலக்கியம், பாமர மக்களின் இசையும் நடனமும், தெருக்கூத்தும் பிற பொழுதுபோக்குகளும் - என எட்டுத் தலைப்புகளில் சோமலெ தொகுத்தளித்துள்ள தகவல்கள் பல சிறப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றன.
பல ஜாதியினர், பழங்குடியினரிடம் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள், திருமண முறைகள், கோயில்களில் இசைக்கப்படும் கருவிகள், பெருவிழாக்கள், தேரோட்டச் சிறப்பு, நாட்டை ஒன்றுபடுத்தும் சமய நம்பிக்கைகள், நாட்டுப்புறக் கலைகள், நாட்டிய வகைகள் குறித்த ஆசிரியரின் குறிப்புகள் கவனத்துக்குரியவை. நூலின் ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான தளத்தில் ஆய்வுகள் நடத்த முடியும். பல தகவல்களை சரித்திரச் சான்று என்றே கொள்ளலாம்.