பரிசு பெற்ற கதைகள்
பரிசு பெற்ற கதைகள் - பக்.256; ரூ.290; இருவாட்சி (இலக்கிய துறைமுகம்), சென்னை - 11; ✆ 94446 40986
1977-இல் 'இலக்கிய வீதி'-ஐ தோற்றுவித்த இனியவன், இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகளை நடத்தி இளம்படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தார். அவரின் தமிழ்த் தொண்டை நினைவுகூரும் வகையில் 'அமரர் இலக்கிய வீதி இனியவன் நினைவு' சிறுகதைப் போட்டி செப்.2023-இல் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று பரிசு பெற்ற 4 சிறுகதைகள், சிறப்பு கவனம் பெற்ற 16 சிறுகதைகளை தொகுத்து 'பரிசு பெற்ற கதைகள்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு சூழ்நிலைகளையும், வாழ்க்கையையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பல எழுத்தாளர்களின் எழுத்துநடையை ஒரே நூலில் கொண்டு கதம்ப நூலாக அமைந்துள்ளது.
முதல் பரிசு பெற்ற சு.வேணுகோபாலின் காயங்களில் படிந்த ராகம் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையை மட்டுமின்றி அந்த சமூக அமைப்பை விளக்குகிறது. அதே நேரத்தில் இரண்டாம் பரிசு பெற்ற அனந்த் ரவியின் என்னுயிர் நின்னதன்றோ ஒரு பெண்ணின் உணர்வுகளை விளக்குகிறது. ஆசுவின் ஒரு வாளி தண்ணீர் நகர வாழ்க்கையை விளக்குகிறது. இதுபோன்ற ஒவ்வொரு கதையும் மாறுபட்ட கதைக் களத்தையும், வாழ்க்கையின் சிறுசிறு தருணங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
பல்வேறு துறைகளில் மறைந்துள்ள எழுத்தாளர்கள் இதுபோன்ற போட்டியின் மூலம் இலக்கிய உலகில் தடம் பதிக்கின்றனர். அந்த வகையில், ராணுவ அதிகாரியான கர்னல் மு. குமாரின் 'ஆபரேஷன் மூன்றாம் பெக்', அரசு அதிகாரியான தர்மராஜன் முத்துசாமியின் 'கோப்புகளால் ஒரு கொலை' சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன. சிறுகதை வாசகர்களுக்கு புதியதொரு அனுபவம்.