நீதிக் கதைகள்! முகவரி கேட்கும் கிளி!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
ஒரு குடும்பத்தார் வீடு மாறி, புதிய முகவரிக்கு போய்க் கொண்டிருந்தனர். அவர்களுடைய சாமான் செட்டுகள் ஒரு மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டிருந்தன. அதோடு அவர்களும் ஏறிக்கொண்டனர்.
அவற்றின் மேல் அவர்கள் வளர்த்துக் கொண்டிருந்த கிளியும் ஒரு கூண்டுக்குள் இருந்தது. கிளிக்குப் பேசப் பழக்கியிருந்தார்கள்! அது நன்றாகப் பேசிக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தது!
சாலை குண்டும் குழியுமாக இருந்தது. வண்டி ஒரு குழியில் இறங்கி ஏறியது! அப்போது கிளிக்கூண்டு கீழே விழுந்துவிட்டது! கிளி பதறிப் போய் சமாளித்துக் கொண்டது!
Advertisement
Advertisement
"நல்ல காலம் பொழச்சேன்!" என்று கீழே உருண்ட கூண்டிலிருந்து கத்தியது. கிளியைக் கூண்டோடு மறுபடியும் எடுத்து வைத்தார்கள்.
வண்டி சற்று தூரம் சென்றது! மீண்டும் ஒரு குழி! மறுபடியும் வண்டி குழியில் இறங்கி ஏறியது! கூண்டு கீழே விழுந்து விட்டது! கிளிக்கு லேசாக வலித்தது! "நல்லகாலம்! பலத்த அடி ஏதும் இல்லை!".... என்று விழுந்த கூண்டிலிருந்த கிளி கூறிக்கொண்டது!
மறுபடியும் கிளையைக் கூண்டோடு தூக்கி மீண்டும் அதே இடத்தில் வைத்தார்கள். இப்படியே ஐந்து முறை கூண்டுடன் கீழே விழுந்துவிட்டது கிளி.
கிளி பொறுமையை இழந்து விட்டது! வண்டியில் இருப்பவர்களைப் பார்த்து,, "அந்தப் புதிய முகவரியை என்கிட்டே கொடுத்தா நான் பாட்டுக்கு பறந்தே போயிடுவேன்ல!"..... ஏன்யா இப்படி சித்ரவதை பண்றீங்க?' என்றதாம் அந்தப் பேசும் கிளி!
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.